நில அபகரிப்பு வழக்கில் பாஜக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பிரிவாக முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் செயல்படுகிறது. இந்திய இஸ்லாமியர்களுக்கு இடையே தேசிய உணர்வு, நாட்டுப்பற்று, சங்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லிம்களிடம் கொண்டு செல்வதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட பிரிவு ஆகும். இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சுதர்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும்  26 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தியதை வரவேற்று இருந்தது இந்த அமைப்பு.

முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் தமிழ் மாநில தலைவராகவும், தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகியாகவும் பாத்திமா அலி இருந்து வருகிறார். இவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Muslim Rashtriya Manch state leader Fathima ali arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->