முத்துராமலிங்க உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய தமிழக கவர்னர்.! - Seithipunal
Seithipunal


இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் 60-வது குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள் பசும்பொன்னின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதன்பின்னர் கவர்னர் மாளிகை ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி. ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை வருங்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muthuramalinga devar jayanthi governor respect


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->