அரசியல் தலைவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்க வேண்டும் - சீமான் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்ததாவது, "முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேரளா மாநிலத்திற்கு சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். 

தமிழகத்தில் இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, கோவை கார் வெடிப்பு வழக்கை எதற்கு தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கினார்கள். அனைத்து உரிமைகளையும் மாநில அரசு இழந்து வருகின்றது. 

இவர்கள் போன்றோரை கவர்னராக நியமிப்பதை ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் நிறுத்த வேண்டும்.  இவ்வாறு உள்ள அதிகாரிகளை ஓய்வு பெற்ற பிறகு கவர்னராக நியமிக்கிறீர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது. இனிமேல் மக்களுக்காக சேவை செய்து வந்த தலைவர்களை மட்டுமே கவர்னராக நியமிக்க வேண்டும், அரசியல் தலைவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muthuramalinga devar jayanthi seeman respect after press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->