கரூரில் மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு! கூட்டு பாலியல் வன்கொடுமையா? மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!
mysterious Death Of School Girl In Karur District
கரூர் மாவட்டம் கவரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது 16 வயது மகள் சென்ற மாதம் 25ஆம் தேதி மாயமானார்.
சுற்று வட்டார பகுதிகளில் உறவினர்கள் அனைவரும் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. மறுநாள் அருகிலிருந்த கிணற்றில் மாணவியின் உடல் சடலமாக மிதந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தன்னுடைய மகளின் உடல் ஆய்வுக்கூறு செய்யப்பட்டதில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் மறுபரிசோதனை செய்ய வாய்ப்பு வழங்கவும் கலைவாணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து விசாரணை செய்த நீதிபதி மனுதாரரின் மகள் பிரேத பரிசோதனை வீடியோக்களை முறைப்படி அவர்களிடம் வழங்க உத்தரவிட்டார். ஆனால் பெற்றோர்களிடம் வீடியோ எதுவும் ஒப்படைக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் ஆஜரானார். இது குறித்து அவர் பேசுகையில் மாணவியின் உடல் கூறின் போது வீடியோவாக பதிவு செய்ய போலீசாரின் தரப்பில் இருந்து எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. அதனால் வீடியோ பதிவு செய்யவில்லை.
மாணவி இறப்பதற்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை விசாரிக்க எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் பத்து நாட்களாக கிடப்பில் தான் கிடைக்கிறது என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது மாணவியின் இறப்பிற்க்கு பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி நாளை 12:30 மணியளவில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் அதை வீடியோவாக பதிவு செய்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறினார்.
English Summary
mysterious Death Of School Girl In Karur District