தனியாக வந்த வாலிபர்... சுத்து போட்ட கும்பல்... அம்பை அருகே பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கோட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மூத்த மகன் செல்வா என்கின்ற சிவராமன் (25). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுடலைமுத்து என்பவரது குடும்பத்தினருக்கும், செல்வா குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்ற செல்வா மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சுடலை முத்துவின் மகன் உலகநாதன், இடப்பிரச்சனை காரணமாக பேச வேண்டும் என்று செல்வாவை ஆலடியூர் கல்குவாரி அருகே வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து செல்வா ஆலடியூர் காட்டுப்பகுதி அருகே சென்றபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் செல்வாவை சுற்றி வளைத்து அறிவாளால் வெட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி, அம்பை அரசு மருத்துவமனைக்கு வந்த செல்வா, அங்கு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட செல்வா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை செல்வா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வாவை வெட்டிய மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious gang murder the youth in tirunelveli ambai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->