திருவள்ளூரில் பரபரப்பு.! தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக பிரமுகரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா, திருவள்ளூர் நகராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் கலைவாணன் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று காலை கலைவாணன் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

அப்பொழுது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கலைவாணனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து நான்கு பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பலத்த காயமடைந்த கலைவாணன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவாணனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious gang tried to kill a DMK executive in tiruvallur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->