திருவானைக்காவல் அகிலாண்டேவரியின் சீர்வரிசையில், சமயபுரம் அம்மனுக்கு அபிஷேகம்; பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், சித்திரை மாதம் தேர் திருவிழா கடந்த 06-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில், சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேவரி கோயிலில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை  உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மேளதாளம் முழங்க இரவு 10 மணி அளவில் சமயபுரம் வந்தனர்.

இந்த சீர்வரிசை சமயபுரம் வந்தபின் அம்பாள் தேர்த்தட்டிலிருந்து இறங்கி கோயிலுக்கு சென்றார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், தளிகை நைவேத்தியம் செய்யப்பட்டது.

தேர் திருவிழாவின் 11-ஆம் திருநாளான இன்று காலை அம்மன் பல்லக்கில் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தடைந்தார். அங்கு கூடிநின்ற பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் நாளை அம்மன் முத்துப்பல்லக்கில்புறப்படவுள்ளார்.

அடுத்ததாக, 18-ஆம் தேதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இரவு 07 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாட்டுடன் விழா நிறைவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

n the order of Thiruvanaikkaval Akilandevari the Goddess of Samayapuram was anointed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->