அமெரிக்காவில் சிக்கிய நாகை பரமேஸ்வரர் கோவில் சிலைகள்.!
NAGAI PARAMESHWAR TEMPLE STATUE FOUND IN USA
நாகப்பட்டினம் மாவட்டம் பரமேஸ்வரர் கோவிலில் இருந்து, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு வெண்கல உலக சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், அதே கோவிலில் இருந்து மொத்தம் 11 சிலைகள் திருடு போனது தெரியவந்தது.
தொடர்ந்து பாண்டிச்சேரி ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்ற புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, விநாயகர், தேவி சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனை அடுத்து இந்த சிலைகளை மீட்பதற்கு உண்டான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
NAGAI PARAMESHWAR TEMPLE STATUE FOUND IN USA