வேளாங்கண்ணி கடற்கரையில் பெரும் சோகம்... கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் பலி.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜா கம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரின் மற்றும் ரியானா. அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகள் சஹானா. இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு அவர்கள் தேவலாயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர். பின்னர் இன்று காலை வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு கடலில் குளித்தனர். அப்போது ஆரோக்கிய ஷெரின், ரியானா,  சஹானா ஆகிய 3 பேரும் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர்.

அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர். சுற்றுலாப் பயணிகள் சிலர் நீந்தி சென்று மூழ்கிய நிலையில் இருந்து 3 பேரையும் மீட்டு அவசர உறுதி மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மூணு பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் கடற்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagai velanganni beach accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->