ரூ.4 கோடி விவகாரம்.. டைம் கேட்கும் நயினார்.. எஸ்கேப் ஆக திட்டமோ? - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி இரவு உரிய ஆவணம் என்று கொண்டு செல்ல முயன்ற ரூபாய் 4 கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். 

இந்த பணத்தை புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுனர் பெருமாள் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணம் கொண்டு செல்வதாக வாக்குமூலம் கொடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையிலும் ரூ.4 கோடி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று வாக்குமூலம் கொடுத்தது பதிவாகி இருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்டு தாம்பரம் காவல் நிலையத்திற்கு நயினார் நாகேந்திரன் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக இன்று நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டிய நிலையில் அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். தாம்பரம் காவல் ஆணையரிடம் நயினார் நாகேந்திரன் சார்பாக வழங்கப்பட்ட கடிதத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் நயினார் நாகேந்திரன். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nainar Nagenthiran not appeared in Tambaram police station


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->