ரூ.1,00,00,00,000 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்!
Nandavanam Heritage Park at Rs 1000000000 Crore Tamil Nadu Tourism Department Information
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் "நந்தவனம் பாரம்பரிய பூங்கா" எனும் மிகப்பெரிய பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பீட்டில், 223 ஏக்கரில் உருவாக்கப்படும் இந்த பூங்கா, கோவளம் அருகே அமைக்கப்படுகிறது.
இந்த பூங்கா மூன்று பிரிவுகளாக அமைக்கப்படுகிறது: சோலை வனம், விஹாரம், மற்றும் மைதானம்.
சோலை வனம்: இது தமிழக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட உள்ளது. பாரம்பரிய கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத் தோட்டம், கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் காட்சி, மற்றும் பொம்மை பூங்கா போன்றவை இடம்பெறுகின்றன.
விஹாரம்: குழந்தைகள் மற்றும் விளையாட்டு பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பகுதியில், ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாட்டு பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவை உருவாக்கப்பட உள்ளன.
மைதானம் : சமூக நிகழ்வுகளுக்காக 13 ஏக்கரில் 25 ஆயிரம் பேர் கூடும் திறந்த மைதானம் அமைக்கப்படுகிறது. இதில், வாலிபால், டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டு மைதானங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், நீர் வழிகள், மற்றும் நீர் முனையில் படகு சவாரி உள்ளிட்ட செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இதற்குறிய வசதிகளுடன், சிறு கடைகள், உணவகங்கள், திறந்தவெளி திரையரங்கு, மற்றும் கலாச்சார குடில்கள் அமைக்கப்படும்.
இந்த புதிய பூங்கா, சென்னைவாசிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மேலும் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் என்று சுற்றுலா துறை அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
English Summary
Nandavanam Heritage Park at Rs 1000000000 Crore Tamil Nadu Tourism Department Information