போதை மாத்திரை, கஞ்சா விற்பனை! காதல் ஜோடி கைது! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே வாடகை வீடு எடுத்து போதை மாத்திரை, கஞ்சா விற்பனை புகாரில் காதலியுடன் சேர்த்து காதலன் கைது!

சென்னை, குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற நிலையில் , அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களை பிடித்து விசாரித்தனர். 

போலீசார் விசாரித்த போது, அவர்கள் விஜய் என்ற நபர் வீட்டில் போதை மாத்திரை வாங்குவதற்காக வந்துளோம் என ஒப்புக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில், விஜய் என்ற நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 

சோதனை செய்த போலீசார், அங்கிருந்து  200 கிராம் கஞ்சா, 300 வலி நிவாரண மாத்திரைகள், 4 செல்போன்கள் 36 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த விசாரணையில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் என்றும், இவருக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்வதில் அவரது காதலி ஜாஸ்மினுக்கும் தொடர்பு இருப்பதால், அவரையும் கைது செய்த போலீசார். 2 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narcotic drug cannabis sales Love couple arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->