அரச கடமைகளில் இருந்து விலகிய நார்வே இளவரசி.!
narway queen step down in royal duties
நார்வேயின் இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட்டின் ஆன்மீக ஆசிரியரான டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலிப்பதால், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், கேன்சர் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இளவரசி மார்த்தா லூயிஸ் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடியின் மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து இளவரசி மார்த்தா லூயிஸ் தெரிவித்ததாவது, "நோயாளிகளுக்கு வழக்கமான மருத்துவத்துடன், மாற்று மருத்துவ முறைகள்(யோகா, தியானம், அக்குபஞ்சர்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்த நார்வே அரச குடும்பமும், 51 வயதான நார்வேயின் இளவரசி மார்த்தா லூயிஸ், தனது 'இளவரசி' பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வார், ஆனால் அந்த பட்டத்தை எந்த வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்த மாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
narway queen step down in royal duties