தேசிய கொடி ஏற்றிய துப்புரவு பணியாளர்.! காவல் ஆய்வாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு.!!
national flag was hoisted by cleaner in tenkasi
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அதே போன்று சென்னை கொத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிறகு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய நபர்களை அழைத்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் துப்புரவு பணியாளரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கே.எஸ்.பாலமுருகன் தனது காவல் நிலையத்தில் துப்புரவுப் பணியாளரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். துப்புரவு பணியாளர் தேசியக்கொடியை ஏற்றியதும் அனைத்து காவலர்களும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் ஆய்வாளர் பாலமுருகனுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
national flag was hoisted by cleaner in tenkasi