பெரிய அளவில் பெயர்பலகைகள் வைக்கக் கூடாது - மருத்துவர்களுக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெரிய அளவில் பெயர்பலகைகள் வைக்கக் கூடாது - மருத்துவர்களுக்கு அதிரடி உத்தரவு.!

தேசிய மருத்துவ கமிஷனின் நெறிமுறை மற்றும் மருத்துவர் பதிவு வாரியம் சார்பில், சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவமனைகள், கிளினிக் உள்ளிட்ட இடங்களில், மருத்துவர்கள் குறித்த பெயர் பலகைகள் பெரிய அளவில் இருக்கக் கூடாது. அதில் மருத்துவரின் பெயர், கல்வித் தகுதி, பதிவெண் உள்ளிட்டவற்றை தவிர வேறு தகவல்கள் இடம்பெறக் கூடாது.

'பிரிஸ்கிரிப்ஷன்' எனப்படும் மருத்துவர்களின் மருந்து சீட்டுகளிலும் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். 'ஸ்பெஷலிஸ்ட்' எனப்படும் சிறப்பு மருத்துவர்கள் என்பதை, உண்மையில் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மருந்தகங்கள் மற்றும் தாங்கள் மருத்துவம் அளிக்கும் இடத்தைத் தவிர வேறு இடங்களில், மருத்துவர்கள் தங்களுடைய பெயர் பலகைகளை வைக்கக் கூடாது. மக்களை திசைதிருப்பும் அல்லது குழப்பும் வகையில் பெயர் பலகைகள் இருக்கக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national medical commission says doctors do not large name board


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->