அம்பத்தூர் : பத்தாம் வகுப்பு மாணவர் ஏரியில் மூழ்கி பலி.!
near ambathur tenth class student deid in lake
சென்னையில் உள்ள அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மகன் அரிகுமார். இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அரிகுமார் நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் அருகில் உள்ள கள்ளிகுப்பம் ஏரி பக்கத்தில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அரிகுமார் ஏரியில் இறங்கி கால் கழுவுவதற்கு முயன்றுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஏரிக்குள் விழுந்துள்ளார்.
இதனால், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சம்பவம் குறித்து அரிகுமார் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு பதறிப்போய் ஓடிவந்த அவர்கள் தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் மூழ்கி பலியான அரிகுமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near ambathur tenth class student deid in lake