சென்னை ஐஐடி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - சிபிசிஐடி விசாரணை.!
near chennai IIT student sucide
ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் சென்னை ஐஐடியில், 4-ஆம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுதி ஆண்டு தேர்வில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் வருத்தமடைந்த மாணவர் ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாணவனின் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்குக்கு மாற்றம் செய்யப்பட்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
near chennai IIT student sucide