சென்னை : கடன் நெருக்கடியால் மருந்து நிறுவன பிரதிநிதி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


நாட்டில் அவ்வப்போது கடன் செயலி மூலம் பணம் வாங்குவது அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த கடன் தொல்லையால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அந்த வகையில் சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியை சேர்ந்த வினோத் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ள இவர் கடன் செயலிகளில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.  

மேலும், அவர் இந்த கடனை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார். அதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai man sucide for loan crisis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->