தமிழகத்திற்கு காமராஜர் மாடல் ஆட்சி தேவை : ஜி.கே.வாசன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி தந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு தமாகா தலைமை அலுவலகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு, ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது,

"காமராஜரின் பொற்கால ஆட்சியின் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.வளமான தமிழகத்திற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் ஆட்சி தேவை. கிராம வளர்ச்சியை மேம்படுத்துவதில் சுணக்கம் காட்டுவது தெரிகிறது.

கிராமங்களுக்கான நிதியை முறையாக விடுவித்து அதன் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பு" என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai tmk leader office gk vasan press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->