ரெயிலில் ஒட்டப்பட்ட வாரிசு போஸ்டர் சேதம்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!!
near chennai varisu movie poster damage in train
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்தவகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டுவாரங்களே உள்ள நிலையில் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
ஏனென்றால், கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதுகிறது. இதை ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எச். வினோத் இயக்கத்தில் அஜித் "துணிவு" என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதேபோன்று, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் "வாரிசு" படத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இதற்கு முன்னதாக இந்த படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
வரும் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புரோமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக, சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரெயில் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் போன்றவற்றில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்தபுரி ரெயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் போஸ்டர் குறித்த வீடியோவை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அந்த போஸ்டரை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வாரிசு படக்குழு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
near chennai varisu movie poster damage in train