தருமபுரி : கேட்டது ஒன்னு.. எழுதி இருந்தது ஒன்னு.. தட்டி கேட்டதால் எட்டி உதைத்த காவலர்.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் நேற்று மாலை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நான் நேற்று முன்தினம் அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகள்களை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றேன். 

அப்போது, பள்ளிக்கு எதிரில் நின்றிருந்த போக்குவரத்து தலைமை காவலர் மற்றும் சக காவலர்கள் எனது வாகனத்தை நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கு அபராதமாக ரூ. 2,300 பணம் கேட்டனர். 

ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதற்கு ஆன்லைன் மூலம் அபராதம் கட்ட சொல்லி ரசீது கொடுத்தனர். அந்த ரசீதில், அபராத தொகை ரூ.1,000 என்று குறிப்பிட்டிருந்தது. 

இதை பார்த்து ஆச்சரியமடைந்த நான், என்னிடம் ரூ.2,300 கேட்டீர்கள். ஆனால் ரசீதில் ரூபாய் 1000 மட்டும் உள்ளதே என்று கேட்டதற்கு, என்னை தரக்குறைவாக பேசி, இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கி பூட்ஸ் காலால் எட்டி உதைத்தனர். 

வலி தங்க முடியாமல், என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியபோது என்னை காவல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று எனது சாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதோடு சரமாரியாக தாக்கினார்கள். 

அதன் பின்னர் என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கிகொண்டு என்னை மீண்டும் எனது இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டனர். 

இதையடுத்து, நான் எனது மனைவிக்கு போன் செய்து வரச் சொன்னேன். அவர் என்னை அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். நான் முறையாக தலைமை காவலர் அளித்த ரசீதுபடி அபராதம் செலுத்த தயாராக இருந்தேன்.

இருப்பினும், அவர் அளவுக்கு அதிகமாக பணம் கேட்டது குறித்து கேள்வி கேட்டதால் மனிதாபமானமின்றி கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dharmapuri traffic police attack man for not wearing helmate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->