திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம் - காங்கிரஸ் நிர்வாகி உயிரிழப்பு.!
near dindukkal man died for bike accident
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, நிலக்கோட்டை இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கவுதம். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை இளைஞரணி நகரச் செயலாளராகவும், ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் நேற்று இரவு வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று விட்டு நிலக்கோட்டை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் டவர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் கவுதம் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியது. இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த கவுதமை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவுதம் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, போலீசார் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்துள்ளனர்.
English Summary
near dindukkal man died for bike accident