கள்ளக்குறிச்சி || கடனை அடைக்க சொன்ன தாய்.! கட்டையால் அடித்துக்கொன்ற மகன்..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி தெற்கு காட்டுகொட்டா பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வேலம்மாள். இவர்களுக்கு சுரேஷ், வேல்முருகன் என்ற இரு மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முருகேசன் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு தாய் வேலம்மாள் தனது மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலம்மாள் தங்களது குடும்ப கடன் தொகை ரூ.17 லட்சத்தை திருப்பி அடைக்குமாறு தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடன் தொடர்பாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அண்ணன் சுரேஷ், தம்பி வேல்முருகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது, மூத்தமகன் சுரேஷ் மற்றும் அவரின் உறவினரான முனீஸ்வரன் மகன் கவுதம் உள்ளிட்டோர் கட்டையாலும், இரும்பு பைப்பாலும் தாய் வேலம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதில், பலத்த காயமடைந்த வேலம்மாளை அவரது உறவினர்கள் மீட்டு அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த  மருத்துவர் வரும் வழியிலேயே வேலம்மாள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kallakurichi loan problam son kill mother


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->