காஞ்சிபுரம் அருகே மினிலாரி மீது கார் மோதல் - 4 பேர் படுகாயம்.!
near kanchipuram four peoples injury for mini lorry and car accident
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்கேஷ். இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காரில் காளஸ்த்திரி சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
இதையடுத்து, இவர்கள் காஞ்சிபுரம் வழியாக செவிலிமேடு பகுதியை கடந்து பாலாற்று மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது முன்னால் கோழியை ஏற்றி சென்று கொண்டிருந்த மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த விக்கேஷ், இரண்டு குழந்தைகள் மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மினிலாரி மீது சார் மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
near kanchipuram four peoples injury for mini lorry and car accident