கரூர் : திருமணமான பெண்ணை கடத்திய காதலன்.! தீவிர வேட்டையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

நாளடைவில், இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததனால், அவர்கள் தனது உறவுக்கார வாலிபர் சூரியா என்பவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு அதன் படி, கடந்த மாதம் 27-ந் தேதி இருவருக்கும் பழனியில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

பெண் கடத்தல் 

இந்த நிலையில், காதலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து, தகவலறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், தனது அண்ணன் சக்திவேல் மற்றும் குளத்துப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் உள்ளிட்டோரை அழைத்து கொண்டு காதலியின் கணவர் வீட்டிற்கு சென்றார். 

அங்கு, தனது காதலியை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை கார்த்திக் மற்றும் உடன் வந்தவர்கள் தாக்கியுள்ளனர் 

இதில், சூர்யாவின் தந்தை பழனிச்சாமி மற்றும் சினேகாவின் தாயார் புஷ்பா உள்ளிட்டோர் பலத்தக் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இருவர் கைது

இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சினேகா மற்றும் கார்த்திக்கை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karoor young man kidnape married woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->