தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே பாஜக மாநில நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.!
near kovilpatti enforcement department raie bjp state excuetive house
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சிவந்தி கே.நாராயணன். பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், அரசுத் துறை சார்பில் நடைபெறும் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து அமலாக்க துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உட்பட மூன்று அதிகாரிகள் சிவந்தி நாராயணன் வீட்டிற்கு வந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த சோதனை எதற்காக என்பது குறித்து சிவந்தி நாராயணன் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.
சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டதையறிந்த பாஜகவினர் திடீரென வீட்டின் முன்பு திரண்டனர். மேலும், அவர்கள் சோதனை நடத்த வந்த அதிகாரியிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அதிகாரிகள் தகவல் சொல்ல மறுப்புத் தெரிவித்து விட்டனர்.
English Summary
near kovilpatti enforcement department raie bjp state excuetive house