அரசு பேருந்து மோதியதில் தீ பிடித்த கார் - ஐந்து பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ். இவர் தனது குடும்பத்துடன் மதுரைக்கு காரில் வந்துள்ளார். அதன் பின்பு இன்று காலை தனது குடும்பத்துடன் கேரளாவுக்கு திரும்பி சென்றனர். 

இதையடுத்து அவர்களது கார் உசிலம்பட்டி டூ மதுரை மெயின்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் கேரள குடும்பத்தினர் சென்ற கார் மீது மோதியது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கேரள குடும்பத்தினர் சென்ற கார், பேருந்து மோதிய வேகத்தில் ரோட்டிற்கு வெளியே சென்று திடீரென தீப்பிடித்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிதீஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் வேகமாக காரில் இருந்து வெளியே வந்தார்கள். ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. வேகமாக வெளியே வந்ததால் அவர்கள் மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

பேருந்து மோதியதில் நிதீஷ் குடும்பத்தினர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madurai govt bus acr accident five peoples injured


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->