ஓசியில் மதுபானம் கேட்டு தகராறு.! ஆத்திரத்தில் பார் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்கள் கைது.!
near nagapattinam two peoples arrested for petrol bomb attack
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவூரில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இந்த மதுபானக் கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள் ஓசியில் மது கேட்டுள்ளனர்.
அதற்கு கடை ஊழியர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் சேர்ந்து ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதைப்பார்த்த பார் உரிமையாளர் பாஸ்கரன் இருவரையும் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து இரண்டு வாலிபர்களும் பாஸ்கரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் "வெளியே வா உன்ன பார்த்துகுறோம்" என்று பாஸ்கரிடம் மிரட்டி விட்டு, பின்னர் மது பாட்டில்களில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, போகும் வழியில் பாஸ்கரின் வீட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக வீட்டில் விழுந்து வெடித்த பெட்ரோல் குண்டுகள் பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்களை உடனடியாக கைது செய்தனர். பார் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near nagapattinam two peoples arrested for petrol bomb attack