நாகை : சிக்கல் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய இருசக்கரவாகனம் - 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்தி லெப்பை தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிமும், அலியார் மறைக்காயர் தெருவைச் சேர்ந்த ஆஷிக் ரகுமானும் நெருங்கிய நண்பர்கள். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று அதிகாலை நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  இதையடுத்து இவர்கள் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியுள்ளனர். 

இந்த விபத்தில் ஆசிக் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய இப்ராஹிமை சிகிச்சைக்காகவும், உயிரிழந்த ஆசிக்கை பிரேத பரிசோதனைக்காகவும் மீட்டு  நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, இப்ராஹிமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கரவாகன விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near nagapattinam two young mans died for bike accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->