முதல்முறையாக மருத்துவம் படிக்க தேர்வான இருளர் இன மாணவி - மாவட்ட ஆட்சியர் வாழ்த்து.!
near neelagiri irular cast student selecterd mbbs course
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தும்பி பெட்டு பகுதியில் இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன். இவரது மனைவி ராதா. இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஸ்ரீமதி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி பொதுத்தேர்வில், தேர்ச்சி பெற்று 406 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவம் படிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால், தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை பார்த்து தானாகவே படித்து நீட் தேர்வு எழுதினார். ஆனால், அதில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால், ஸ்ரீமதி கோவையில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வில் மாணவி ஸ்ரீமதிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்தது.
இந்தநிலையில் ஸ்ரீமதி நேற்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இது குறித்து மாணவி ஸ்ரீமதி தெரிவித்ததாவது, "நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில்பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் நான்கு முறை நீட் தேர்வு எழுதினேன். அதில் இரண்டுமுறை தனியார் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது.
ஆனால், அந்த கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், என்னால் அங்கு சேர முடியவில்லை. மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்ற ஆசையில், வேறு எந்த உயர்கல்வியிலும் சேராமல் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்.
தற்போது நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பு படிப்பதற்கு அரசு கல்லூரியிலேயே இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன்.
அதிலும் குழந்தைகள் நல மருத்துவரகுவதற்கு முடிவு செய்து உள்ளேன்" என்று அந்த மாணவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஒரு இருளர் இன வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவர் முதல் முறையாக மருத்துவம் படிப்பதற்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
near neelagiri irular cast student selecterd mbbs course