பண்ருட்டி அருகே பட்டாக்கத்தியுடன் வலம் வந்த வாலிபர்கள்.! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
near pandrutti two youths arrested for drink and drive with weopans
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே சிறு கிராமத்தில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் தலைக்குமேல் கத்தியை சுழட்டிக்கொண்டு அலப்பறை செய்து வந்தனர். இதைப்பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பட்டாக்கத்தியுடன் அலப்பறை செய்த வாலிபர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த திவான் மற்றும் முருகன் என்பதும், இவர்கள் இருவரும் சமையல் வேலை செய்பவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இவர்கள் இருவரும் மடப்பட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு மது போதையில் சிறு கிராமத்தில் 12-ம் வகுப்பு படித்து வரும் தனது உறவுக்கார மாணவன் மணி பாலனை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது தான் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பட்டாகத்தியை சுழட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக சிறு கிராமத்தை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் திவான், முருகன் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும், மாணவன் மணி பாலனுக்கு அறிவுரைக் கூறி எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
English Summary
near pandrutti two youths arrested for drink and drive with weopans