பெரம்பலூர் || வினோத போராட்டத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் பகுதியை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பராமரிப்பு மேற்கொள்ளும் பணியில் சுமார் 130 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். 

அதில் 28 ஊழியர்களை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 28 பேரையும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியில் சேர்க்ககோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து, கடந்த 5- ம் தேதி ஆதார் கார்டு வாக்காளர் அட்டை அடையாள அட்டை ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றின் நகல்களை எரித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்தின் நாற்பதாவது நாளான இன்று நூதன முறையில் பாடை கட்டி போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, "திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான பணி நீக்க செயலை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near perambalore tolgate workers strike


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->