மனைவியை தவறாக பேசியதை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை.!
near tirupur neighbour kill young man
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் ஒன்றிய பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவரின் மனைவி ராணி. இவர்களுக்கு ராகுல் என்ற மகனும், ராகவி என்ற மகளும் உள்ளனர்.
இதையடுத்து, திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதிக்கு கட்டிட வேலைக்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்ற இவர்கள் திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைக்கு சென்றனர்.
இதேபோல், பிரவீன் வீட்டின் எதிர் வீட்டில் மற்றொரு கட்டிட தொழிலாளியான தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த அண்ணாமலை தங்கியிருந்து வந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை, பிரவீன் மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் கல்லாத தொடர்பு இருப்பதாக அருகிலுள்ளவர்களிடம் தெரிவித்து வந்தார். இதையறிந்த பிரவீன் அண்ணாமலையை எச்சரித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடந்த மூன்று மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்றிரவு இவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில், கோபமடைந்த அண்ணாமலை தனது வீட்டில் இருந்த கத்தியால் பிரவீனை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமணையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவீன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் அண்ணாமலையை தேடினார்கள். இதையறிந்த அண்ணாமலை தப்பியோடிவிட்டார்.
பின்னர் அண்ணாமலையை போலீசார் மண்ணரை ஊத்துக்குளி சாலை பகுதியில் மடக்கி பிடித்து, கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near tirupur neighbour kill young man