கறிவிருந்துக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிய புதுமணத் தம்பதிகள் - வழியில் நேர்ந்த கொடூரம்.!
near trichy new married couples died for accident
திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகள் ராகினிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீகராஜன் மகன் செந்தில்குமாருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று இவர்கள் இருவரும் ராகினியின் தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்கு நடைபெற்ற கிடா வெட்டு திருவிழாவில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் பெரம்பலூர் நோக்கி புறப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் ஆங்கரை பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி புதுமானத் தம்பதியர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கறிவிருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
English Summary
near trichy new married couples died for accident