குழந்தைகளை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி.! விரட்டி பிடித்து கொலை செய்த உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிப். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கிராமம் கிராமமாக அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மஹ்ஜபீன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில்  எதிர்ப்பு இருந்ததனால் இவர்கள் இருவரும், வீட்டை விட்டு ஓடி கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்தனர். 

இந்த சம்பவம் குறித்து மஹ்ஜபீன் குடும்பத்தினர்கள் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, இருவரையும் உறவினர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து, இருவரும் மீரட் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

இதையறிந்த மஹ்ஜபீன் சகோதரர்கள் அவர்கள் இருவரையும் கிராமத்துக்கு அழைத்து வந்து, இருவரையும் கடுமையாக தாக்கி கொலை செய்தனர். அதன் பின்னர், ஆரிப்பின் உடலை சப்ராலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லம்ப் கிராமத்திலும், மஹ்ஜபீன் உடலை அசரா கிராமத்தின் காட்டிலும் வீசி எறிந்து விட்டு,போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near uttar pradesh brothers kill siser and boy friend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->