#நீட் விலக்கு மசோதா., கேள்வி கேட்ட மத்திய அரசுக்கு, பதில் தயாரித்துள்ளோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம், நீட் விலக்கு மசோதா குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், "நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை, திட்டம். அந்த வகையில் தான் தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

இதுவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற இருமுறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரிடம் அனுப்பி இருக்கிறோம். தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்த மசோதாவினை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் இந்த மசோதா சம்பந்தமான, சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த அமைச்சகங்களின் குறிப்புகளுடன் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து குறிப்புகள் கடந்த மாதம் அனுப்பப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், தமிழக அரசுக்கு கடந்த வாரம் ஐந்தாம் தேதி தான் கிடைத்தது.

மத்திய அரசு அனுப்பியுள்ள அந்த குறிப்பில், நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு என்று தெரிவித்துள்ளது. நீட் விலக்கு மசோதா தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக உள்ளதா என்றும் மத்திய அரசு இந்த குறிப்பில் கேள்விஎழுப்பியுள்ளது.

நீட் தேர்வு தகுதியின் அடிப்படையான தேர்வு என்று மத்திய அரசு குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்க்கு சட்ட வல்லுநர்களை கொண்டு பதில் தயாரித்துள்ளோம்; பதில் அறிக்கையை அனுப்பிய பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்கப்படும். மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும்" என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet issue ma subramaniyan press meet july 20


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->