திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்?...மலை உச்சியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒரு தூணில் தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடப்பு மாதம் 16-ம் தேதி கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், மலை உச்சியில் உள்ள தூணில் யாரோ சிலர் அத்துமீறி தீபத்தை ஏற்றியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்து முன்னணியை சேர்ந்த பிரசாந்த், சூர்யா, சண்முகவேல், அரசுபாண்டி ஆகிய 4 பேரை கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தில் செல்வகுமார், சரவணன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள தூணை சுற்றி மூங்கில்களால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், மதுரை மாநகர் போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி உத்தரவின்பேரில், 16 பேர் கொண்ட ஆயுத படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மலையில் 24 மணி நேரமும் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karthikai deepam on tiruparangunram hill police security with guns on the top of the hill


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->