நெல்லை : ரயிலில் வந்த திடீர் புகை!...அலறியடித்த பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்- மும்பை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, நெல்லை சந்திப்பில்  பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், நெல்லை அடுத்த தாழையூத்து ரயில் நிலையம் அருகே சென்றபோது ஏ-1 ஏ.சி. பெட்டியின் அடியில் இருந்து திடீரென்று புகை வெளியேறியதால், அந்த ரெயில்  உடனடியாக  தாழையூத்து ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் பெட்டியின் அடியில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்த பயணிகள் அலறியடித்து அவசரமாக கீழே இறங்கினர்.

இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீ அணைக்கப்பட்ட நிலையில், புகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், ஏற்கனவே ரயிலில் பிரேக் பிடித்தபோது சக்கரத்துடன் இணைந்த பிரேக் ரப்பர் பகுதி மீண்டும் விலகாமல் இணைந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக புகை ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், 30 நிமிடங்கள் தாமதத்திற்கு  பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai sudden smoke in the train what is the fate of the passengers who were startled


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->