அதிரடி காட்டும் தமிழக பட்ஜெட் - சென்னைக்கு அருகே புதிய நகரம்..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எக்கச்சக்கமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதிலும் சென்னைக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்:-

* சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

* சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

* தாம்பரத்தில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை நிறுவப்படும்.

* சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். 

* புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.

* குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. அதனால், புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது.

* அதன் படி சென்னைக்கு அருகே நவீன வசதிகளுடன் 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new city near chennai minister thangam thennarasu info


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->