தமிழக வேளாண் பட்ஜெட்: புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்படும்.. அமைச்சர் அறிவிப்பு.!
New electric motor pump sets will be provided in the subsidy
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகியது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ரூ.கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.
ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்.
English Summary
New electric motor pump sets will be provided in the subsidy