சென்னை விமான நிலையத்தில் புதிதாக அவசர ஊர்திகள் அறிமுகம்.!
new emergency vehicles run in chennai airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணியகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக இரண்டு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட நான்கு புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன.
இதனை சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியசைத்து செயல்பாட்டுக்கு இயக்கி வைத்தார். இதன்மூலம் விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை 9-ஆகவும், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரித்துள்ளது.
English Summary
new emergency vehicles run in chennai airport