பொதுமக்களே உஷார்.. தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.!
New mysterious Fever spread in Nilgiris
ஊட்டியில் வேகமாக பரவுறோம் மர்ம காய்ச்சலால் அரசியல் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் அடிக்கடி ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மெட்ராஸ் ஐ போன்ற மழைக்கால தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் மூடுபனி மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அங்கு சளி, காய்ச்சல், கை, கால்வலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் பருவநிலை மாற்றத்தால் ஃப்ளூ போன்ற புதிய காய்ச்சல் பரவுவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
New mysterious Fever spread in Nilgiris