#மதுரை || அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்.. மாடுகளின் திமில் தெரியும்படி.. புதிய கட்டுப்பாடு விதிப்பு.!!
New restrictions on bulls participating in Avaniyapuram Jallikattu
உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி 15 முதல் 3 நாட்ட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்படுத்துகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை தகுதிச்சான்று பெற வேண்டும். அந்த தகுதி சான்று பெறுவதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மாடு திமில் தெரியும் வகையிலும், மாட்டின் உரிமையாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், கலப்பின மாடுகள் பங்கேற்க அனுமதியில்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .
English Summary
New restrictions on bulls participating in Avaniyapuram Jallikattu