ஜோடியாக நடனமாட வாடகை அழகிகள்! சென்னை இளைஞர்களின் புதிய உக்தியா?! - Seithipunal
Seithipunal


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகள் கலை கட்டி உள்ளது.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழுவாக சேர்ந்து நடனம் ஆடுவது, ஜோடி சேர்ந்த நடனம் ஆடுவது என, பல நடன நிகழ்ச்சிகளுக்கு நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், ஜோடியாக சேர்ந்து நடனமாடும் கொண்டாட்டங்களில், தனிநபர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்ற விதி இருப்பதால், ஜோடியுடன் சென்று நடனம் ஆடுவதற்கு இளைஞர்கள் புது யுக்தியை கையாண்டு உள்ளனர்.

இதுபோன்ற ஜோடி நடனங்களில் ஆடுவதற்காக 'வாடகை ஜோடிகள்' புக் செய்து கொண்டாட்டத்துக்கு இளைஞர்கள் தயாராக இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல லோ கிளாஸ், மிடில் கிளாஸ், ஹை கிளாஸ் வரை நடன அழகிகள் சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

இன்று இரவு ஜோடியாக நடனம் ஆடுவதற்கு மட்டும் சுமார் ரூபாய் 5 ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரை நடன அழகைகளை  இளைஞர்கள் தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்தி உள்ளதாகவும் அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், இதில் சில நிபந்தனைகளும் இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. அதாவது நடன நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு வாடகை அழகிகளை பத்திரமாக அவர்களின் வீட்டு அருகில் கொண்டு விட வேண்டும் என்ற ஒப்பந்தமும் இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

குறிப்பு : இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை, பதிவுகளைக் கொண்டு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Year 2023 rent Jodi in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->