கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு..செல்பி எடுத்தபோது விபரிதம்!  - Seithipunal
Seithipunal


குமரியில் தடை செய்யப்பட்ட இடத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர், கால் தவறி கடலில் விழுந்தார். கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. 

சேலம் மாவட்டம் மாரமங்கலத்தைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்தனர்.அதனை தொடர்ந்து  அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க புறப்பட்டனர். அப்போது அங்கு 27  வயது விஜய் என்ற வாலிபர் உள்பட சிலர் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட 'மரணப் பாறை' என்று கூறப்படும் இடத்துக்கு சென்றனர்.

இதையடுத்து உற்சாக மிகுதியில் பாறையில் நின்றபடி விஜய் 'செல்பி' எடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல்  விஜய்கால் தவறி கடலில் விழுந்தார். மேலும் இதனை சற்றும் எதிர்பார்க்காத  அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் பின்னர் விஜய்யை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் அலையில் சிக்கி கடலில் மூழ்கினார்.

உடனடியாக இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது  கடலில் மூழ்கிய வாலிபரை படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நீண்ட நேரம் தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தொடர்ந்து 2-வது நாளாக அவரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜயின் உடல், டவர் அருகே சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body of missing youth found in sea waves When I took a selfie!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->