புத்தான்டு கொண்டாட்டம்! கடலூரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!  - Seithipunal
Seithipunal


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டு ஓடிய பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்த பலியான சம்பவம் கடலூர் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டுகொள்ளை கிராமத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தபோது காவல்துறை வாகனத்தின் சத்தம் கேட்டு இளைஞர்கள் ஓடியுள்ளார்.

இதில், தரை கிணற்றுக்குள் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் ஆரியா நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த 12ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் படு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலியான செய்தி கடலூர் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


முன்னாதாக திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Year celebration accident Panruti


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->