ஒமைக்ரான் எதிரொலி : பொதுமக்கள் இங்கெல்லாம் செல்ல தடை., மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. 

தற்போது, நாட்டில் பல மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் கடற்கரைகளை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் 31 முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதிவரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW YEAR RULE IN KANNIYAKUMARI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->