அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் "இடி மின்னலுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மையம்
Next 3 hours thunderstorm lightning with rain in 14 districts of tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, வடுகம், மெட்டாலா, மங்களபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
English Summary
Next 3 hours thunderstorm lightning with rain in 14 districts of tamilnadu