17 வயது சிறுமியால் 19 இளைஞர்களுக்கு எய்ட்ஸ் (HIV) - அதிரவைக்கும் பின்னணி! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம், நைனிதாலில், போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த 17 வயது சிறுமியிடம், பாலியல் தொடர்பில் இருந்த 19 இளைஞர்களுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சிறுமி உடன் தொடரில் இருந்த ஒரு இளைஞர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் HIV உறுதிசெய்யப்பட்டது. 

இதன்பின், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமியிடம் பாலியல் தொடர்பில் இருந்த 19 இளைஞர்களுக்கு தொற்று பரவியிருப்பதாக தெரியவந்தது.

இவ்வாறு தொற்று பரவுவதற்கு முன்பு, சிறுமி பலருடன் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், இது மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிகழ்வு என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் உடல்நலத்தை  பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

தற்போது, சம்பந்தப்பட்ட அனைத்து இளைஞர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இப்பதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarakhand 19 youngsters affected HIV


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->