பாமக போராட்டம் எதிரொலி | டாஸ்மாக் கடைகள் மூடல்! - Seithipunal
Seithipunal


கடலூர் : வளையமாதேவி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்களை ஜே.சி.பி. இயந்திரத்தை இறக்கி, பயிர்களை நாசமாக்கி கால்வாய் அமைக்கும் பணியில் என்எல்சி நிர்வாகம் இறங்கியுள்ளது .

இதனை கண்டித்து இன்று பாமக சார்பில் நடைபெறும் நெய்வேலி என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, என்எல்சி நிர்வாகத்திற்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.  

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மேல் வளையமாதேவி கிராமத்தில் நடைபெற்ற என்எல்சி பணிகள் இன்று நிறுத்தபட்டுள்ள நிலையில், இந்த பனி மீண்டும் தொடங்கினாள், நாளை முதல் காலவரையற்ற சாலைமறியல் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, பாமகவின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக, கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neyveli NLC issue PMK protest TASMAC shop closed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->